தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது என மு.க.ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் அரசின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டிலேயே கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும்,
சென்னையில் கொரோனாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலை அளிக்கிறது என கூறியுள்ளார். தமிழக அரசு கொரோனா மரணங்கள் விவரத்தை வெளியிட தாமதம் என்? என கேள்வி எழுப்பிய அவர் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்தது வேதனையானது. கொரோனா பேரிடரை அரசு பொறுப்பற்று,மோசமாக நிர்வகிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா நோய் சமூக பரவல் ஆகவில்லை என்று தவறான தகவலை அரசு கூறுகிறது, தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மே 10ல் கொரோனா தொற்றின் கேந்திரமாக கோயம்பேடு மார்க்கெட் மாறிவிட்டது, மொத்த கொரோனா பாதிப்பில் 10%-ஐ சென்னை நகரம் கொண்டிருந்தது. கொரோனா தொற்று சென்னையில் மட்டும் 5.2% அதிகரித்து உள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார்.