கொரோனா அச்சம் காரணமாக சிறையில் கைதிகளை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளை குறைக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சட்ட வல்லுநர் குழுவை அமைத்து கைதிகளை குறைப்பது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. சிறைக்கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிறையில் கைதிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.