உலக அளவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கி வருகிறது.
சீனாவில் தொடங்கிய இந்த கொடூர கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் மனித இழப்பை கொடுத்து வருகிறது. இந்நிலையில் நாளுக்குநாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். என்னதான் முழு ஊரடங்கு போடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும் வைரஸின் தீவிரம் இன்னும் குறையவில்லை. இதனால் நாடு முழுவதும் தற்பொழுது வரை 2,40,42,680 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் இந்தக் கொடிய வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,65,91,843 ஆக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இருந்தாலும் இந்தக் கோர முக வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 8,22,499 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 66,28,843 ஆகும். இதில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளவர்களின் எண்ணிக்கை 61,719 பேர். அதுமட்டுமில்லாமல் உலகிலேயே இந்த வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தில் எப்பொழுதுமே இருந்து வருவது அமெரிக்காதான். இரண்டாமிடம் பிரேசிலும் மூன்றாம் இடத்தில் தொடர்ந்து இந்தியாவும் இருந்து வருகிறது.