Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா உறுதி.. இதுவரை 897 பேர் டிஸ்சார்ஜ்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,464 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதித்தவர்களில் 80 பேர் சென்னைக்கு வந்து சென்றவர்கள் ஆவர். சென்னையில் இருந்து வேலை நிமித்தமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழிசாலைகளுக்கு தினமும் செல்கின்றனர்.

அவர்களுக்கு தினமும் எடுக்கப்பட்டு வரும் பரிசோதனைகளில் பலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.  அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது கொரோனாவில் இருந்து 897 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் செங்கல்பட்டை சேர்ந்த 1,529 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரும்பாலும் குன்றத்தூர், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சி நெடுஞ்சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், மக்கள் முகக்கவசங்கள் இல்லாமல் வெளியே வரும் காரணத்தால் தான் தொற்று பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |