Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சுமார் 400 மாவட்டங்களை கொரோனா தாக்கவில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!

இந்தியாவின் சுமார் 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகள் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டள்ளது என அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது, ” ஜனவரி 7ம் தேதி சீனாவில் முதல் கொரோனா வைரஸ் நோய் கண்டறியப்பட்ட செய்திக்கு பதிலளித்த நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

இது தொடர்பாக ஜனவரி 8ம் தேதி நடைபெற்ற நிபுணர் குழு கூட்டத்தில் நாங்கள் பணியாற்றத் தொடங்கினோம். ஜனவரி 17 அன்று, நாங்கள் சுகாதார ஆலோசனைகளை வழங்கினோம்” என கூறினார். தற்போது கிடைத்த தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,933 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 10,197 பேர் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 392ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |