தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்தது. இன்று மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 234ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று இருந்த 6 பேர் குணமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.