Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா …. 22ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு …!!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு முதல் முறையாக ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 1000த்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 1149 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 22,251ஆக எகிறியுள்ளது. இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் மொத்த பலி எண்ணிக்கை 175ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2ஆவது முறையாக இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. 1286 12 வயத்துக்குற்ட்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று ஒரே நாளில் 757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 12, 757 பேர் வீடு திரும்பி இருக்கின்றனர்.

Categories

Tech |