தமிழகத்தில் கொரோனாவுக்கு இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற விழுப்புரம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த 52 வயது ஆணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு (03.04.20) அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று காலை 7.44 மணிக்கு உயிரிழந்தார்.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் தற்போது கொரோனாவுக்கு இரண்டாவது நபர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உயிரிழந்த 52 வயதானவரின் உடல் விராட்டிகுப்பத்தில் உள்ள சுபஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது.
இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஏற்கனவே கொரோனா பாதித்த தமிழகத்தை சேர்ந்த நபர் உயிரிழந்த நிலையில் இது கொரோனாவுக்கு இரண்டாவது உயிரிழப்பாகும்.