Categories
தேசிய செய்திகள்

கொரோனா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…. 13 பேர் பலி… சோகம்…!!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு 13 பேர் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் நகரில் விஜய் வல்லப் கொரோனா மருத்துவமனை நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 4:00 மணி அளவில் ஐசியு வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்பு படைவீரர்கள் சிறிது நேரத்திலேயே தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முழுவதுமாக அணைத்து விட்டனர். அதன்பின் தீயில் சிக்கி 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 21 நோயாளிகளை மீட்டு வந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திடீர் தீ விபத்திற்கு காரணம் ஏசி வெடித்ததால் ஏற்பட்டதாக மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு பிரிவு தலைவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே விசாரணை நடத்தப்பட உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விபத்துக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

அதன்பின் விராரில் உள்ள கொரோனா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது துயரமானது என்றும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதன்பின் மருத்துவமனை தீ விபத்தில் நோயாளிகள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது, அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன் என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |