Categories
ஈரோடு திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

19 நாட்கள் கொரோனோவிடம் சிக்கித்தவித்த ஈரோடு இளைஞன்… குணமடைந்து வீடு திரும்பினார்..!!

19 நாட்கள் கோரோனோவிடம் சிக்கித்தவித்த ஈரோட்டை சேர்ந்த இளைஞன் குணமடைந்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார்.

கடந்த மாதம் 22ம் தேதி துபாயில் இருந்து திருச்சி வந்த விமானப் பயணிகள் 154 பேரை பரிசோதனை செய்ததில், ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அந்த இளைஞன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 19 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் இளைஞர்.

இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான ஈரோட்டிற்கு அனுப்பப்பட்டார். முன்னதாக மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள் உற்சாகத்துடன் கைதட்டி அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா, கொரோனோவில் இருந்து குணமடைந்த ஈரோடு இளைஞர் 28 நாட்களுக்கு அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று அவர் கூறினார்.

 

Categories

Tech |