Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு எதிரொலி – டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை!

சீனாவில் உருவாகி உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் 3200 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் கேரளாவில் ஆரம்ப நிலை கண்ட நோயாளிகள் மற்றும் மீட்கப்பட்ட மூன்று நோயாளிகள் உட்பட இந்தியாவில் இதுவரை மொத்தம் 30 பேரிடம் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஒருவருடன் தொடர்புகொண்ட ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றிக்கொண்டுள்ளது. இதனால் எச்சரிக்கை அடைந்துள்ள அரசு, கொரோனா வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டெல்லியில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பால் பள்ளிகளை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளனர். டெல்லியில் அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் நாளை முதல் மார்ச் 31 வரை விடுமுறை என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இதனால் டெல்லியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |