இந்தியாவில் கொரோனா வைரசால் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்த நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் மட்டும் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகா , டெல்லி, மராட்டியம் , பஞ்சாப் என 4 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மட்டும் மூன்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
இன்று காலாய் மஹாராஷ்டிராவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்ததை தொடர்ந்து பீகார் மாநிலம் பாட்னாவில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதையடுத்து குஜராத் மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சூரத் நகரில் சிகிச்சை பெற்று வந்த 69வயது முதியவர் தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை7 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 3 மரணம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.