Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸிற்கு இதுவரை உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,16,320ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,96,496ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,700லிருந்து 23,077 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது 4749 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் அங்கு 840 பேர் குணமடைந்துள்ள நிலையில் 283 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் இன்று 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2000ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 4 மாத குழந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |