Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் ஊரடங்கு நீட்டிப்பு செயல்படுத்தப்படும்: சுகாதார அமைச்சர்

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் பிரதமர் மோடி அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ” கேரளாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் தற்போது குணமடைந்து வருகின்றனர். இது எங்களுக்கு மிகவும் சாதகமான அறிகுறியாக உள்ளது. அதேபோல, முழுவதுமாக சரியாகிவிட்டது என கூறமுடியாது.

எனவே பிரதமர் மோடி அறிவித்தபடி, மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது, மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் 194 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர். 179 பேர் குணமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. வைரஸ் தொற்றால் இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து உயிரிழப்புகள் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள 9,352 பேரில் 8,048 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 980 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 31 பேர் உயிரிழந்ததாக மத்திய ,சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதிகளவாக மகாராஷ்டிராவில் 2,334 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் உயிரிழப்பு 160 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 1,510 பேரும், தமிழகத்தில் ஆயிரத்து 173 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 873 ஆகவும், மத்திய பிரதேசத்தில் 604 ஆகவும், தெலங்கானாவில் 562 ஆகவும், குஜராத்தில் 539 ஆகவும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |