Categories
மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : வீட்டுக்கு ரூ.15,000 ? நீதிமன்றத்தில் வழக்கு …!!

கொரோனா தாக்கம் இருக்கும் வரை மாதம் ரூ 15,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. பெரிய கடைகள் , மால்கள், திரையரங்கம் என அனைத்தையும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 22-ஆம் தேதி யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதோடு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி போயுள்ளது. வருமானம் இன்றி தவிக்கும் பொதுமக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு சென்னை சேத்துப்பட்டில் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் உமாபாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், அண்டை மாநிலமான கேரளா கொரோனா பாதிப்பு நிவாரண நிதி திட்டமாக ரூபாய் 20,000 கோடி ஒதுக்கியுள்ளது. அதேபோல தமிழகத்திலும் கொரோனா தாக்கம் இருக்கும் வரை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ 15 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல வீடுகளுக்கே சென்று சோப்பு , மாஸ்க், கிருமிநாசினி ஆகியவை இலவசமாக வழங்கவும் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

Categories

Tech |