Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன என்றும் கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது.

இது ஜி-20 நாடுகளில் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கமாக இருக்கிறது என தெரிவித்த ஆர்பிஐ ஆளுநர், கொரோனா பாதிப்பால் ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் வாகன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாக தயாராக உள்ளது என்றும் உலகளவில் பொருளாதார நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது, இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37%ஆக அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். மேலும் 2021-21ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |