இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,10,807 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 47,539 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 17,56,998 ஆக இருக்கின்றது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 47,782 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் பாதிப்பு குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது.
இன்று கொரோனா தொற்று 37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது. இன்று இதுவரை இல்லாத அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று குணமடைந்தவர்களை விட பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது..
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :