இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,07,416 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 44,186 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 17,09,459 ஆக இருக்கின்றது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 46,714 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் பாதிப்பு குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது.
இன்று கொரோனா தொற்று 37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இன்று பாதிப்பு அதிகரித்திருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு குணமடைந்து வீடு திரும்பியிருப்பது சற்று மகிழ்ச்சியை அளிக்கிறது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :