சென்னையில் 60% IT நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய கோரி அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது படிப்படியாக உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ள சமயத்தில், கேரளா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என்பதற்காக கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்,
சென்னையிலும் இதன் தாக்கம் ஏற்படாமல் இருக்க ஐடி நிறுவனங்களும் பிரபல தொழிற்சாலைகளும் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் இயங்கும் 60% ஐடி நிறுவனங்கள் தங்களிடம் வேலை பார்க்கும் வேலை ஆட்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுமாறு வலியுறுத்தி உள்ளனர்.
அதிலும் டிவிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களை வெப்பநிலையை கணக்கிடும் தர்மல் பரிசோதனைக்கு பின்பே வேலை செய்ய அனுமதி அளிக்கின்றது. மேலும் வீட்டிலிருந்து உணவு எடுத்து வரும் ஊழியர்கள் அதிகபட்சம் தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் கூடுமான வரையில் சிறிது காலத்திற்கு சக ஊழியர்கள் தொட்டு பேசிக் கொள்ள வேண்டாம் என்றும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நின்று தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.