சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று பரவியதால் அனைத்து துறைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இந்த மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு சென்னை ஐஐடியில் கல்லூரி திறக்கப்பட்ட நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில், ஏற்கனவே கொரோனா தொற்று 71 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 33 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என மொத்தம் 71 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை ஐஐடியில் உள்ள அனைத்து துறைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்லைன் வழியாக படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மாரு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்படக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து விடுதிகளில் தங்கியுள்ள மொத்தம் 774 மாணவர்களில் மொத்தம் 408 மாணவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.