சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 655ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 567 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,699 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோடம்பாக்கம் – 1,231, திரு.வி.க நகரில் – 1032, தேனாம்பேட்டை – 926, தண்டையார் பேட்டை – 823 அண்ணா நகர் – 719 என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமா பாதிக்கப்பட்டுள்ளன . கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் 774 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 774 இருந்து 655 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. கடந்த 14 நாட்களாக புதிதாக பாதிப்பு இல்லாத 86 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராயபுரம் மண்டலத்தில் 164 ஆக இருந்த தெருக்களின் எண்ணிக்கை 135 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல திரு.வி.க.நகர் மண்டலம் – 124ல் இருந்து 105ஆக குறைக்கப்பட்டுள்ளது.