Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட இருவர் தப்பியோட்டம்: காவல்துறையில் அதிகாரிகள் புகார்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் தப்பிச்சென்றதாக காவல்துறையிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் சரியாக 12 மணியளவில் இருவர் உடல்நல குறைவு காரணமாக ஆய்வகத்தில் மார்பக ஸ்கேன் செய்துள்ளனர். மேலும் பல சோதனைகள் மேற்கொண்டதில் அவர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அறிந்த இரு நபர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எந்த வித தகவலும் இன்றி வெளியே சென்று விட்டனர். இதையடுத்து மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களை தேடும் பணியில் கால்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில், தப்பிய இருவரில் ஒருவர் சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். கூடிய விரைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் பாதிப்பு வறட்டு இருமல், சளி, மூச்சு திணறல், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |