Categories
உலக செய்திகள்

நாம் ஒரு ஏழை நாடு….. வேற வழியில்லை… கதறும் இம்ரான்கான்….!!

பாகிஸ்தான் ஏழ்மையான நாடாக இருக்கும் போது ஊரடங்கு தளர்த்துவதை தவிர வேறு வழியில்லை என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்

உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று பாகிஸ்தானில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஊரடங்கை தளர்த்தி இருப்பது ஆபத்தானது என பல தரப்பினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கை  தளர்த்தியது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கம் கூறியுள்ளார். அதில், “ஊரடங்கு அமல் படுத்துவது கொரோனா தொற்றிற்கு தீர்வாக அமையாது என்பதை உலக நாடுகள் அறிந்துகொள்ள தொடங்கிவிட்டது.

கொரோனா பரவிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த தொற்று உச்சத்தை அடைந்த பிறகுதான் குறைவடையும் என கூறப்படுகின்றது. அதிலும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை கொரோனா தொற்று ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இது மிகவும் இக்கட்டான காலம்தான். பாகிஸ்தான் ஒரு ஏழ்மையான நாடு. இதற்கு ஊரடங்கை தளர்த்துவதை தவிர வேறு வழி இல்லை” எனக் கூறினார். இதுவரை பாகிஸ்தானில் கொரோனா தொற்றினால் 1,08,317 பேர்  பாதிக்கப்பட்டு 2,172 உயிரிழந்துள்ளனர். அதோடு 35 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |