Categories
சென்னை மாநில செய்திகள்

“தமிழகத்தில் கொரோனா” வரலாறு காணாத சரிவு….. மலிவான விலை…. ரூ50க்குள் அடங்கிய காய்கறிகள்….!!

கொரோனா வைரஸ் காய்கறி விலையில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தமிழகத்தின் காய்கறி விலையையும் சரித்திரம் காணாத அளவு மாற்றி அமைத்துள்ளது. எப்போதும் கோடை காலம் நெருங்கும் பட்சத்தில் காய்கறி விலை உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் அது மிகவும் சரிந்துள்ளது. அதற்கான காரணம் தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

தற்போது கொரோனா பாதிப்பால் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய காய்கறிகள்  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தஞ்சமடைந்து விட்டன. இதனால் தேக்கம் ஏற்பட்டு காய்கறிகளின் வீணாகிவிடக்கூடாது என்பதற்காக அதன் விலையை குறைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றன. அதன்படி,

தக்காளி கிலோ ரூபாய் 8 முதல் 10 ரூபாய்க்கும், தேங்காய் ஒன்று 20 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று ஏழு ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 25, சாம்பார் வெங்காயம் கிலோ ரூபாய் 45, கேரட் ரூபாய் இருபது, கத்தரிக்காய் ரூபாய் 10 புதினா ஒரு கட்டு ரூபாய் மூன்று என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இன்னும் பல காய்கறிகள் ஏற்கனவே விற்கப்பட்ட விலையிலிருந்து  பாதி விலைக்கு குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை மாற்றம் இன்னும் 10 நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |