தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.
தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கபட்டடோர் எண்ணிக்கை 234ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 24 மாவட்டங்களை பாதித்துள்ள கொரோனா வைரசால் கோவை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைபெற்று வரும் நிலையில் சென்னை, திருநெல்வேலியில் தலா 29 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு :
மாவட்டம்
|
சிகிச்சை பெறுபவர்கள்
|
கோவை | 33 |
திருநெல்வேலி | 29 |
சென்னை | 29 |
ஈரோடு | 21 |
தேனி | 20 |
நாமக்கல் | 18 |
திண்டுக்கல் | 17 |
மதுரை | 15 |
செங்கல்பட்டு | 8 |
திருப்பத்தூர் | 7 |
சேலம் | 6 |
சிவகங்கை | 5 |
கன்னியாகுமரி | 5 |
விழுப்புரம் | 3 |
தூத்துக்குடி | 3 |
காஞ்சிபுரம் | 3 |
வேலூர் | 2 |
திருவண்ணாமலை | 2 |
திருவாரூர் | 2 |
கரூர் | 2 |
விருதுநகர் | 1 |
திருப்பூர் | 1 |
திருச்சிராப்பள்ளி | 1 |
தஞ்சாவூர் | 1 |