பாரிஸை சுற்றியுள்ள நதி மற்றும் கால்வாயில் உள்ள தண்ணீரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் இருக்கும் சீன் நதி மற்றும் எவர்க் கால்வாயில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சாலைகளை சுத்தம் செய்யவும் நகரத்தின் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சவும் வழங்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை. அலங்கார நீரூற்றிற்கும் இந்த தண்ணீர் தான் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நதி மற்றும் கால்வாயில் எடுக்கப்பட்ட இந்த தண்ணீரில் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் மாசுபடுவதற்கான ஆபத்துக்கள் ஏதுமில்லை என நகர அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பாரிஸில் இருக்கும் நீர் அதிகாரசபையின் ஆய்வகம் தலைநகரை சுற்றியிருக்கும் தண்ணீரில் 27 மாதிரிகளை எடுத்தன.
அதில் நான்கு மாதிரிகளில் சிறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தினால் முன்னெச்சரிக்கையாக வலையமைப்பினை உடனடியாக நிறுத்த காரணமாக அமைந்தது என்று செலியா பிளேவல் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.