Categories
உலக செய்திகள்

உலகையே உலுக்கிய கொரோனா… 20 கோடியைத் தாண்டிய பாதிப்புகள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

உலகம் முழுவதும் சுமார் 18.05 கோடி பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 20 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது 20,02,34,964 பேருக்கு உலகம் முழுவதும் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுவரை உலகளவில் 18,05,03,977 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 42 லட்சத்து 58 ஆயிரத்து 448 பேர் வைரஸ் தாக்குதலுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே தற்போது மருத்துவமனைகளில் 1,54,72,539 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 92 ஆயிரத்து 417 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |