Categories
தேசிய செய்திகள்

கொரோனா அதிகரிப்பு… படுக்கைகள் பற்றாக்குறை…. தான் படுக்கையை விட்டுக் கொடுத்த முதியவர்…. மூன்றே நாட்களில் உயிரிழப்பு… சோகம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் தனது படுக்கையை விட்டுக் கொடுத்த 80 வயது முதியவர் வீட்டிற்கு சென்ற  3 நாட்களில் உயிரிழந்துள்ளார். 

இந்தியா முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சத்தில் மூழ்கியுள்ளது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதனின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. பொதுவாக கொரோனா சிறு வயதினரையும், வயது முதிர்ந்தவரையும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தி வந்தது. ஆனால் இரண்டாவது அலையாக அசுர வேகம் எடுத்து வரும் கொரோனா நடுத்தர வயது உடைய இளைஞர்களை அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனை முழுவதும் நிரம்பி வழிகின்றன. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகளும், ஆக்ஸிஜனும் அதிக அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயதுடைய நாராயணன் பவுராவ் தபக்ட்ர் என்ற முதியவர் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க படுக்கை வசதி இன்றி தாமதமான நிலையில் படுக்கை கிடைத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதே மருத்துவமனையில் கதறியபடியே பெண் ஒருவர் அவரது கணவர் 40 வயது உடைய ஆண் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவதற்காக அங்கு வந்துள்ளார்.

பிறகு படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைக் கேட்டறிந்த  இந்த முதியவர் நான் வாழ்ந்து முடித்து விட்டேன் என்று அவரின் படுக்கையை அந்த இளைஞருக்கு விட்டுக் கொடுத்துள்ளார். அதன்பின் வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்துள்ளார். பிறகு சிகிச்சை பலனின்றி மூன்று நாட்களிலேயே முதியவரின் உயிர் பிரிந்தது. இதனை அறிந்த இணையவாசிகள் பலரும் இவரை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |