Categories
தேசிய செய்திகள்

கொரோனா அதிகரிப்பு… ஆக்சிஜன் பற்றாக்குறை…24 நோயாளிகள் உயிரிழப்பு… சோகம்..!!

 கொரோனா அதிகரிப்பால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அரசு  மருத்துவமனையில் 24 நோயாளிகள் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால்  மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

இந்த நோய் அதிகரிப்பினால் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிக அளவில் ஏற்பட்டு மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழக்கும் அவலம்  தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சரிசெய்ய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் ஆக்சிஜன் சரியான நேரத்திற்குள் சென்று அடையாததால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் மட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் பிற காரணங்களால் 24 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பின்பு இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனை ஆய்வுக்கு பின்பு அரசு தரப்பில் இறந்ததற்கான விளக்கம் தெரிவிக்கப்படும். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட முதல்வர் எடியூரப்பா அவர்கள் மாவட்ட கலெக்டரை தொடர்புகொண்டு பேசினார். அப்போது நடந்த சம்பவம் தொடர்பாக கலந்துரையாட நாளை அமைச்சரவையை கூட்டி தெளிவு படுத்துவார்.

Categories

Tech |