தெலுங்கானா மாநிலத்தில் மூன்று மாத குழந்தைக்கு செவிலியர் ஒருவர் தாயாக மாறிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி மூன்று மாத குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த தந்தை, தாய் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் கார் ஓட்டுனராக மகேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மூன்று மாத குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த கார் ஓட்டுநர் அதே மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் சுனிதா என்பவரிடம் இதைப்பற்றி கூறியுள்ளார்.
இதையடுத்து குழந்தையை வீட்டிற்கு வைத்து தூக்கி வந்த அவர் தாய்ப்பால் கொடுத்து அந்த குழந்தையை பராமரித்து வந்தார். குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர் ஆலோசனைப்படி அவர் கவனித்தார். தற்போது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தாயுள்ளம் கொண்டு அந்த குழந்தையை செவிலியர் பாதுகாத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனை அனைவரும் மனதார பாராட்டி வருகின்றனர்.