தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நிக்கி கல்ராணி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
திரையுலகின் பிரபல நடிகை நடிகர்கலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமிதாபச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா போன்ற பலர் அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். அந்த வரிசையில் தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக திகழும் நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இவர் வசிக்கிறார். டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், யாகாவாராயினும் நாகாக்க, கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2, கீ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ” கடந்த வாரம் எனக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது.
காய்ச்சல், சூழல் இல்லாத தன்மை, நுகரும் திறன் குறைவு போன்ற பிரச்சினைகள் இருந்தது. அதிர்ஷ்டவசமாக லேசான பாதிப்பு இருந்தது. இதைத்தொடர்ந்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து வருகிறேன். வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன். அனைவரையும் இந்த காலகட்டம் பயமுறுத்திவருகிறது. ஆகவே நாம் பாதுகாப்பாக இருப்பதுடன் மற்றவர்களையும் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். மிகவும் அவசர தேவைக்கு மட்டுமே வெளியே செல்லுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.