மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் மாவட்டத்தை சேர்ந்த 90 வயது நிரம்பிய முதியவர் கொரோனா நோய் தொற்றால் இரண்டு முறை பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார்.
உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் பரவி விரிந்து உள்ளது. இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவில் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. நாளுக்கு நாள் மாநிலத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இருப்பினும் கொரோனா நோய் பாதிப்பிலிருந்து இங்குள்ள பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டுரங் ஆத்மராம் 90 வயது நிரம்பிய முதியவர் இரண்டு முறையில் கொரோனா நோய் தொற்றிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.
இவர் கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து மீண்டு வந்ததுக்கான இரகசியம் பற்றி கூறியுள்ளார். அதாவது, எனக்கு முதல் முறை நோய்த்தொற்று ஏற்பட்ட போது நோயின் தாக்கம் குறைவாகவே இருந்தது. ஆனால் இரண்டாவது முறை நோயின் தாக்கம் அவ்வளவு எளிதாக இல்லை விளிம்பின் உச்சத்திற்கு சென்று மீண்டும் தப்பி வந்துள்ளேன். நான் இரண்டு முறை கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்ததற்கு முக்கியமான காரணங்கள் தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தேன். மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். இதுதான் நோய் தொற்றிலிருந்து விடுபட பெரிதும் உதவியது.
ஆனால் இன்றுள்ள இளைஞர்கள் மது பழக்கத்திற்கு ஆளாகி, உடற்பயிற்சிகள் செய்யாமல், சரியான பழக்கவழக்கங்களை கடைபிடிக்காமல், எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உண்ணாமல் வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மீண்டு வருவது கடினமான ஒன்றாகும். ஆனால் எனக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்ட போதும் நான் நம்பிக்கையை இழக்காமல் உடல்நலம் மற்றும் உணவில் அதிக கவனத்தைச் செலுத்தி மன உறுதியுடன் சிகிச்சை அளித்து வந்தேன் என்று முதியவர் கூறியுள்ளார். இவர் நோய் தொற்றிலிருந்து மீண்டு வர முக்கிய காரணம் மன வலிமையுடன் முக்கியமான ஆதாரங்களை உட் கொண்டு வந்ததே ஆகும்.