தமிழகத்தில் முழுவதும் உள்ள 37 மாவட்டத்திலும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் இதுவரை இல்லாத உச்சமாக 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இதுவரை இல்லாத அளவாக இன்று 5,723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,62,249 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 61,342 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 23,24,080 ஆக இருக்கின்றது.
அதேபோல இன்று ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,571 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 54,896 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. தமிழகத்தில் இன்று ஒரு மாவட்டமும் தப்பவில்லை.. கொரோனா தொற்று 37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது. இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:
சென்னை – 1,138
செங்கல்பட்டு -448
திருவள்ளூர் -474
காஞ்சிபுரம் -362
தூத்துக்குடி – 349
விருதுநகர் – 338
கோவை – 313
தேனி – 280
ராணிப்பேட்டை – 273
தி.மலை – 267
மதுரை – 249
குமரி -239
க.குறிச்சி-238
நெல்லை-191
சேலம்-190
திருச்சி – 188
வேலூர் – 184
விழுப்புரம் – 139
திண்டுக்கல்- 133
தஞ்சை-115
தென்காசி-112
கடலூர்-109
புதுக்கோட்டை-98
திருவாரூர்-67
கிருஷ்ணகிரி-60
ராமநாதபுரம்-54
திருப்பத்தூர்-53
சிவகங்கை-48
அரியலூர்-48
திருப்பூர்-39
நீலகிரி -39
நாமக்கல் -38
தர்மபுரி – 32
ஈரோடு -27
நாகை-22
பெரம்பலூர் – 21
கரூர்-7