கொரோனா நோயாளியை அவரது காதலி சிகிச்சையின் போதே திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து அவர் தொற்றிலிருந்து மீண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் அதிகரித்து வருவதால் பல்வேறு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னரே முடிவு செய்யப்பட்ட திருமணங்கள் கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் சில திருமணங்கள் குறைவான நாட்களிலேயே எளிமையாக நடந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கார்லெஸ் முனீஸ் என்பவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பாதிப்பு மிகவும் அதிகமானதால் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு அதன் மூலம் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. மேலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி அவரது காதலி கிரேஸ் என்பவர் தனது காதலனுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதன்படி நேரடியாக மருத்துவமனைக்கு சென்று அவர் சிகிச்சை பெறும் போதே நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவர் கொரோனவிலிருந்து மீண்டு ஆச்சரியத்தை ஏர்படுத்தியுள்ளார். அவரின் உண்மை காதலே குணமடைவதற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.