ராமநாதபுரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு நேற்று 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,700 ஆகும். இதனையடுத்து நேற்று சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 406 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,037 பேர் கொரோனாவிற்கு தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.