கொரோனா நோய்க்கு சிகிச்சை அழிக்க பயன்படுத்தி வரும் ரெம்டெசிவிர் ஊசி மருந்து தயாரிக்க நான்கு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் 8 நிறுவனங்களுக்கு மருந்து தயாரிக்க உரிமம் வழங்க பட்டுள்ளது.
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மராட்டியத்தில் நோய்தொற்று இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்த மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாக கருதப்படும் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையத்தை மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழாவில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிசும் பங்கேற்றுள்ளார்.
அப்போது நிதின் கட்காரி நோய் தொற்று குறித்து பேசியுள்ளார். அதாவது கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நீண்டகால ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. தற்போது மாநிலத்தின் நிலைமை மிகவும் மோசமானது. இந்த கொரோனா நோய் பரவல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாத புதிர் ஆகும். மக்கள் எதையும் ஏற்றுக்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரேம்டெசிவிர் ஊசி மருந்து தயாரிக்க 4 நிறுவனங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ரெம்டெசிவிர் ஊசி மருந்து பற்றாக்குறை ஏற்படுவதால் மேலும் 8 நிறுவனங்களுக்கு மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.