Categories
தேசிய செய்திகள்

அது உண்மையில்லை… யாரும் நம்பாதிங்க… விளக்கம் அளித்த சுகாரத்துரை…!

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளை அவசரத் தேவைக்காக பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் ஊடகங்களில் இந்த இரண்டு தடுப்பூசிகளும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து இருப்பதாக செய்திகள் பரவி வந்த வண்ணம் உள்ளது.

ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதனைப் பற்றி கூறுகையில், மத்திய அரசு சார்பில் எந்த ஒரு தடையும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்காக விதிக்கப் படவில்லை என்றும், ஊடகங்கள்  தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் கூறியுள்ளனர். இதனை அடுத்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் புஷன் டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறும்பொழுது, கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை. இது முற்றிலும் தெளிவானது.

மேலும் மத்திய அரசில் மூன்று அமைச்சகங்கள் உள்ளன. அவை வர்த்தக அமைச்சகம், சுகாதார அமைச்சகம் மற்றும் வணிக அமைச்சகம் ஆகும். இவற்றுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையும், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகமும் உள்ளன. இது போன்ற தடை நடவடிக்கைகளை இந்த அமைப்புகள் நெருக்கடியான காலத்தில் மட்டுமே எடுக்கும். ஆனால் தற்போது அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப முயற்சிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே ஊடக நண்பர்களுக்காண வேண்டுகோள் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |