Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இறந்த உடலில் இருந்து கொரோனா பரவுமா.? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்..!!

கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலில் இருந்து தொற்று பரவாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்ணாநகர் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம். கொரோனோவால்  இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு. ஒரு மருத்துவர் இருக்கிறார் நிறைய பேருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். அவருக்கு உடம்பு முடியாமல் போய்விடுகிறது சென்னையில். உடனடியாக சோதனை செய்து பார்க்கிறார். அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனோக்கு  சிகிச்சை எடுத்து வருகிறார். சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துவிட்டார்.

அவரை அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்கிறார்கள். அண்ணாநகர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் போகும் பொழுது அங்கே மக்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் அந்த மக்கள் என்ன  கற்கள், கட்டைகள் போன்ற ஆயுதங்களை கொண்டு ஆம்புலன்ஸ் டிரைவரையும் அங்கு இருந்த அத்தனை பேரையும் சரமாரியாக தாக்குகிறார்கள். இருவருக்கு பலத்த காயம், கையில் ஒரு கம்பை வைத்திருக்கிறார்கள். கற்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள், தாக்குவதற்காக தயாராகவும்.

அதுமட்டுமில்லாமல் அங்கிருந்து ஒரு பெண்மணி அடி, தாக்கு என அங்கிருந்து கூறுகிறார். ஆம்புலன்ஸ் கண்ணாடி எல்லாமே சுக்குநூறாக நொறுக்கி விட்டார்கள். உள்ளே இருந்த அத்தனை பேருக்கும் காயம். ஒருவருக்கு பலத்த காயம். போலீசுக்கு தகவல் போகிறது. போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீஸ் வந்ததும் இந்த வன்முறையை விட்டு, சாலை மறியலில் இறங்கிவிட்டார்கள். நிறைய பேர் ஒன்று சேர்ந்து அனுமதிக்கமாட்டோம் என்று கூறியிருந்தாலும்,

 

போலீஸ் கடைசியாக உடலை அடக்கம் செய்துவிட்டு அங்கிருந்து திரும்பினார்கள். இதன்பிறகு காவல்துறை நடவடிக்கைகளில் இறங்கியது. பல பிரிவுகளின் கீழ் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் ஐபிசி 188 அரசு அதிகாரி உத்தரவை மீறுதல், பிரிவு 147 கலவரத்தில் ஈடுபடுதல், பிரிவு 148 ஆயுதங்களுடன் தாக்குதல், பிரிவு 341 சட்டவிரோதமாக சிறைப்பிடித்தல்  இப்படி பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒரு பெண் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணாநகர் வேலங்காடு பகுதி மக்களின் செயலுக்கு ஸ்டாலின், விஜயகாந்த், அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

திரு விஜயகாந்த் கூறியிருப்பதாவது; உடலை அடக்கம் செய்தால் எந்த தொற்றும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனமும், தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளலாம் என்று  தமிழக அரசுக்கு கூறியிருக்கிறார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் யாராவது அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்னுடைய இடத்தை தருகிறேன் எடுத்துக் கொள்ளுங்கள்.

 உலக சுகாதார நிறுவனம் கூறுவது; வெப்பமான பிரதேசங்களில் அதாவது நம்ம ஊரை போல மரணித்த ஒருவரின் உடல் 12 முதல் 48 மணி நேரத்திற்கு நேரத்திற்குள் அழுகத் தொடங்கும். இதனால்தான் 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையிலான குளிர்சாதன பெட்டியில் உடலை பதப்படுத்தி வைக்கிறார்கள். இந்த வசதி இல்லாத இடங்களில் உடலுக்கு இறுதி சடங்கு விரைவில் நடத்தப்படுகிறது. இறந்தவரை அவரது நம்பிக்கைக்கு ஏற்ப இறுதி சடங்கு செய்து புதைப்பது  ஓர் அடிப்படை மனித உரிமை என்று  உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடதக்கது.

சென்னை மாநகராட்சி கூறுவது;  நாம் வாழும் உலகில் கொரோனா பாதித்து  இறந்தவர்களும் ஒரு பகுதியே. சக மனிதர்களாக அவர்களை தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைப்பது நம் கடமை. கொரோனா பாதித்து இறந்தவர்களை தகனம் அல்லது அடக்கம் செய்யும்போது உலக சுகாதார அமைப்பு மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் தெளிவாக பின்பற்றப்படுகிறது. அந்த நபரின் சடலத்தில் இருந்து எந்த ஒரு நோய் பரவலை பற்றியும் அச்சம் வேண்டாம். உங்களுக்கு முழு பாதுகாப்பை நாங்கள் உறுதி அளிக்கிறோம். உலகத்திலிருந்து செல்பவர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் அனுப்பி வைப்போம் என்று  சென்னை மாநகராட்சி தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

நிறைய பேர் இந்த மக்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுவோரின் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |