Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை

நாடு முழுவதும் 325 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய, மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், ” நாடு முழுவதும் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. அதேபோல மகே, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 14 நாட்களில் சுமார் 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது பதிவாகவில்லை என கூறினார்.

நேற்று மத்திய சுகாதார தலைமை செயலாளர் அனைத்து மாநில சுகாதார செயலாளர்கள், டிஜிபி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் முடிவில் நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது என தெரிவித்தார். அந்த வகையில், கொரோனா அதிகம் பாதித்த மாவட்டம், பாதிப்பு குறைவான மாவட்டம், பாதிப்பில்லாத மாவட்டம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதில் சுமார் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு யாருக்கு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் நாடு முழுவதும் இன்று வரை 2,90,401 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், நேற்று மட்டும் 30,043 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று மட்டும், ஐ.சி.எம்.ஆரின் 176 ஆய்வகங்களில் 26,331 சோதனைகள் மற்றும் 78 தனியார் ஆய்வகங்களில் 3,712 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Categories

Tech |