Categories
மாநில செய்திகள்

கோழி இறைச்சியால் கொரோனா பரவ வாய்ப்பில்லை; பொதுமக்கள் அச்சமின்றி உண்ணலாம் – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்!

கோழி இறைச்சியால் கொரோனா பரவ வாய்ப்பில்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோழி இறைச்சியை பொதுமக்கள் அச்சமின்றி உண்ணலாம். கோழி இறைச்சியால் கொரோனா பரவியதாக வதந்தி பரப்பிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சியை அதிகப்படியான வெப்பத்தில் சமைப்பதால் எவ்வித நோயும் தாக்க வாய்ப்பில்லை என அவர் தகவல் அளித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 120க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்தியாவை பொருத்தவரை மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் பல்வேறு வதந்தி பரப்பப்பட்டு வருகின்றது. மேலும் கோழி இறைச்சியை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் எனறும் வதந்திகள் பரவி வருகிறது.

இதனால் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனையடுத்து கோழி இறைச்சி, முட்டை வர்த்தகம் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் கோழிப்பண்ணை தொழிலில் 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 15 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் தினமும் 8 கோடி இழப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |