Categories
உலக செய்திகள்

“உலகின் கடைசி பெருந்தொற்று” கொரோனா கிடையாது…. இன்னும் இருக்கு – WHO எச்சரிக்கை…!!

கொரோனா வைரஸ் தான் உலகின் கடைசி பெருத்தொற்று கிடையாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸிலிருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது பிரிட்டனில் புதிதாக ஒரு வைரஸ் பரவி வருகிறது. மேலும் அந்த வைரஸ் முந்தைய வைரசை விட வேகமாக பரவுவதால், உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்த வைரஸ் கேரளாவில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகின் கடைசி பேரழிவு கிடையாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “கொரோனா வைரஸ் தான் உலகின் கடைசி பெருந்தொற்றும், பேரழிவும் கிடையாது. கால நிலை மாற்றங்களிலும், விலங்குகளின் நலத்தையும் சரி செய்யாமல் மனித குலத்தை மட்டும் மேம்படுத்த நினைப்பது உலகிற்கு பலன் தராது என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவலை தடுப்பதற்காக அதிகமாக பணத்தை செலவிடுகிறோம். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மக்கள் தவறி விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |