இத்தாலி பிரேசிலில் இருந்து தமிழகம் வந்த 40 பயணிகள் முதற்கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனோ நோய் தொற்றுக்கு எதிராக பல சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறையுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பும் பயணிகளை கடும் பரிசோதனைகளுக்குப் பின்பே தமிழகத்தில் உள்நுழைய சுகாதாரத்துறை அனுமதித்து வருகிறது.
அந்த வகையில் இன்று இத்தாலி பிரேசிலில் இருந்து 40 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் வந்து தஞ்சம் அடைந்து உள்ளனர். அவர்கள் முறையே பூந்தமல்லி, தாம்பரம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பின் கொரோனோ பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.