Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. ஒவ்வொரு நாளும் 5,000 பேர்…. கட்டுப்பாடுகளை மீறினால் லட்சக்கணக்கில் அபராதம்….!!

கொரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

ஜப்பானில் சமீப காலமாக  கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதே நேரம் இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு  கடும் தண்டனைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவானது சுகாதாரம், தொழிலாளர் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில்  எடுக்கப்பட்டது. அந்த வகையில்  கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நபர்  மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற  மறுத்தால் அவருக்கு சுமார் ஏழு லட்சம் அபராதம் அல்லது ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

அதேபோல் நோயாளிகளுடனான தொடர்பை கண்டறிவதில் இடையூறுகளை ஏற்படுத்துபவர்களுக்கு  மூன்றரை லட்சம் அபராதம் அல்லது ஆறு மாதங்கள்  சிறை தண்டனை அளிக்கப்படும். இந்த தண்டனைகளுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Categories

Tech |