உணவகங்கள், பார் போன்ற இடங்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
கனடாவில் உள்ள ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள பார், உணவகங்கள், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் மற்றும் இன்னிசை கச்சேரி அரங்கங்கள் போன்ற அனைத்து பொது இடங்களிலும் முழுமையான அதாவது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒன்ராறியோ அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஒன்ராறியோ சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான அலெக்ஸாண்ட்ரா ஹில்கேனே தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உணவகங்கள், பார் போன்ற பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் அளவை பொறுத்து தான் அனுமதி அளிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக இது போன்ற கட்டுப்பாடுகளால் உணவகங்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.