தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா தொற்று தற்போது பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு காரணமாக குறைந்து கொண்டே வருகின்றது. தொற்று குறைந்த காரணத்தினால் தமிழகத்தில் நாளை முதல் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
அதில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்து கொண்டு வருவது ஆறுதல் அளித்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த வேதனையை அளிக்கின்றது. எனவே முதலமைச்சர் அவர்கள் தனிகவனம் செலுத்தி இதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.