இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,007 பேர் பலியாகியுள்ள நிலையில், 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்ற சில வாரங்களாக 50 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. நேற்று வரை 60 ஆயித்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மொத்த எண்ணிக்கை 24,61,191 ஆக உயர்ந்துள்ளது. இதில் 55,573 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 17,51,555 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
2-வது முறையாக இன்று பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேர் பலியாகியதால், இதுவரை 48,040 பேர் உயிரை கொரோனா பறித்து இருக்கிறது. இந்தியாவில் குணமடைந்தோர் சதவீதம் 70.77 ஆகவும், பலியானோர் சதவீதம் 1.96 ஆகவும், சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் 27.27 ஆகவும் இருக்கிறது. நேற்று மட்டும் 8,48,728 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில். இதுவரை 2,76,94,416 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருக்கின்றன.