கொரோனால் ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்.
கொரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் அந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. இதுவரை கொரோனாவால் 33 பேர் தமிழகத்தில் உயிரிழந்து இருக்கும் நிலையில் தற்போது 34ஆவது உயிரிழப்பு நிகழ்ந்திருக்கின்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்த நிலையில் 15 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது முதல் உயிரிழப்பு நிகழ்த்திருக்கின்றது