கொரோனா நிவாரண நிதிக்கு தங்களது ஊதியத்தை திருச்சி கிராம நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்கான ஒப்புதல் கடிதம் அளித்தனர். இந்த ஒப்புதல் கடிதத்தை தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெகன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் வட்டாட்சியர் காதர் அலியை நேரில் சந்தித்து வணங்கினார். அதன்படி உளுந்தூர்பேட்டை தாலுகாவில் பணியாற்றும் சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களின் ஒருநாள் ஊதியமாக சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளது.