Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸ் குறித்து எனக்கு முன்பே தெரியும்”… பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டாரா….!!

கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் உலகில் பரவும் என்று தனக்கு முன்னரே தெரியும் என இலங்கை பிரபல ஜோதிடர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் போன்ற கொடிய தொற்று நோய் ஒன்று பரவி உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் என்று தனக்கு முன்னரே தெரியும் என இலங்கையின் பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டாரா  கூறியுள்ளார். இந்த செய்தியை கேட்டால் பொது மக்கள் அச்சம் அடைவார்கள் என்பதாலேயே நான் வெளியே கூறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவர் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

“இந்த விஷயம் தொடர்பாக நானும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.  திஸாநாயக்கவும் கடந்த  2019 ஆம் ஆண்டு உரையாடல் நடத்தினோம். அதன்படி 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படி ஒரு கொடிய நோய் உலகை தாக்கும் என்று எனக்கு தோன்றியது. எனினும் தொழில்நுட்பம் விஞ்ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் உலக நாடுகளுக்கு இது சாத்தியமாகுமா? என்ற ஒரு எண்ணம் எனக்குள் தோன்றியது. இருப்பினும் நான் தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டேன்.

அப்போது இரண்டு வருடங்களுக்கு மேல் உலகில் உள்ள அனைவரும் கையை கட்டிக் கொண்டு வாயை மூடிக்கொண்டு வாழ நேரிடும் என்று எனக்கு ஜோதிடத்தில் காட்டியது. இதை மக்களிடம் கூறினால் அவர்கள் பயந்து விடுவார்கள் என்ற எண்ணம் இருந்தமையினால் இதனை உலகிற்கு நான் கூறவில்லை. நான் கூறியபோது  எஸ்.பீ.  திஸாநாயக் இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது அவரும்  தனிமையில் இருக்க   வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |