Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழக்கும் ஊழியர்களுக்கும் சம்பளம்… அதுவும் 60 வயது வரை… நெஞ்சை நெகிழ வைத்த டாடா..!!

டாடா நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்தாலும் அவர்களது குடும்பத்திற்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாம் அலை காரணமாக மக்கள் பலரும் உயிரிழந்து வருகின்றன. உயிரிழக்கும் குடும்பங்களுக்கு மாநில, மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் டாடா நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்திற்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என்று  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கு அவரது பணிக்காலம் நிறைவடையும் வரை, அதாவது 60 வயது வரை முழு சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இறந்தவர்களின் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடு வசதி செய்து தரப்படும் எனவும், குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் எனவும் நிர்வாகத்தின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |